தொழில்நுட்பம்

மப்பை அறியும் கருவி

மணிகண்டன்

குடித்து விட்டு கார் ஓட்டுபவரை கண்டுபிடிப்பதற்கு ஆண்டாண்டு காலமாக இருக்கும் ஒரே டெக்னிக், காரை நிறுத்த சொல்லி சம்பந்தப்பட்டவரிடம் வாயை ஊதச்சொல்வதுதான்.

இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள். மதுவின் வாடையை கண்டறியும் விதமாக ஒரு லேசர் கருவியை அவர்கள் உருவாக்கி உள்ளனர். அதை சாலைகளில் ஒரு கேமராவுடன் பொருத்தினால் போதும். அந்தச் சாலையில் ஓடும் ஏதாவது காரிலிருந்து மது வாடை வந்தால் உடனே நம்பர் பிளேட்டுடன் அந்த காரை படம்பிடித்து போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பிவிடும்.

இதன் உதவியால் போலீஸாரும் போதையில் கார் ஓட்டுபவர்களைப் பிடித்து விடலாம்.

SCROLL FOR NEXT