தொழில்நுட்பம்

தளம் புதிது: கோப்பு நோக்கி

சைபர் சிம்மன்

இணையத்தில் உலாவும் போது குறிப்பிட்ட வடிவிலான கோப்புகளைப் பார்ப்பதில் சிக்கலை உணர்ந்த அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வழக்கமான வடிவிலான கோப்புகள் எனில் கிளிக் செய்தவுடன் திறக்கப்பட்டுவிடும். ஆனால் 'ஜிபி ஃபைல்' போல வேறு விதமான வடிவங்களில் இருந்தால் அவற்றைத் திறப்பதற்காகவே தனி மென்பொருளை நாட வேண்டும். இமெயிலில் வரும் கோப்பு வடிவங்களில் கூட இது போன்ற சிக்கலை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட அந்தக் கோப்பு வடிவத்தைத் திறந்து பயன்படுத்த ஏற்ற மென்பொருளை இனி நீங்கள் தேடி அலைய வேண்டாம். 'டாக்ஸ் ஆல்லைன் வியூவர்' மூலம் எந்த வடிவிலான கோப்பையும் நீங்கள் எளிதில் பயன்படுத்தலாம். இதற்காக எந்த மென்பொருளும் தேவையில்லை. இந்தத் தளத்தில் இருந்து கோப்புகளைத் திறப்பதற்கான சேவையை டவுன்லோடு செய்து நிறுவிக்கொண்டால் போதும். உங்கள் பிரவுசரில் நீட்டிப்புச் சேவையாக இது செயல்படும். அதன் பிறகு எந்த வடிவில் கோப்பைப் பெற்றாலும் அதன் மீது, இந்தச் சேவையின் ஐகானை கிளிக் செய்தால் அது திறக்கப்பட்டுவிடும். பிரவசரில் இருந்தே இதனைப் பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி: >dov.parishod.com/

SCROLL FOR NEXT