ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர சிரிய அகதிகளின் நிலையை உணர்த்தும் வேறு இரண்டு சுவரோவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் அகதிகள் சார்பாக மனிதநேய வாதத்தை வலுவாக முன்வைக்கின்றன.
இதைத்தான் பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் நினைவுபடுத்தி, அகதிகள் பிரச்சனையில் அவர்கள் சார்பாகக் குரல் கொடுத்திருக்கிறார். சிரியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதியின் மகன் எனும் குறிப்பை மட்டும் இந்த ஓவியத்துடன் பேங்க்ஸி எழுதி வைத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அகதிகளை ஒரு பிரச்சனையாக அல்லாமல், ஒரு வளமாகக் கருத வேண்டும் எனும் கருத்தை பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.
பொதுவாக பேங்க்ஸி ஓவியங்கள் மூலம் மட்டுமே பேசுவார். விதிவிலக்காக இந்த முறை தான் வரைந்த ஓவியம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் அவர் பிரிட்டன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், "புலம்பெயர்தலை (அகதிகள்) நாட்டின் வளத்திற்கான இழப்பாகப் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது, ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிரிய அகதியின் மகன்தான். அவர் உலகின் மதிப்பு மிக்க ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார். சிரியாவின் ஹாம்ஸில் இருந்து வந்த ஒரு இளைஞரை நாம் அனுமதித்ததால்தான் இது சாத்தியமாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.அகதிகளாக வருபவர்களில் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கலாம் எனும் கருத்தை முன்வைத்து அவர் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த ஓவியங்களை அவரது இணையதளத்திலும் (>http://www.banksy.co.uk/index1.asp) காணலாம்.