தொழில்நுட்பம்

செயலி புதிது: இ-புக் தேடல்

சைபர் சிம்மன்

நிச்சயம் ‘செல்ஃபி' தெரிந்திருக்கும். இப்போது ‘ஷெல்ஃபி'யையும் தெரிந்து கொள்ளுங்கள். ‘ஷெல்ஃபி' ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்காக அறிமுகமாகியிருக்கும் புதிய செயலி. புத்தகப் பிரியர்களுக்கானது.

ஒருவரிடம் உள்ள புத்தகத்தின் இ-புக் வடிவைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தச் செயலி வழி செய்கிறது. இதற்காகக் கையில் உள்ள புத்தகத்தை இந்தச் செயலி மூலம் ஒளிப்படம் (இதுதான் ஷெல்ஃபி) எடுத்துப் பதிவேற்றினால் போதும். அதன் மின்னூல் வடிவைத் தேடித்தருவதுடன், அதை இலவசமாக அல்லது கட்டணம் செலுத்திப் படிக்க உதவுகிறது.

அது மட்டும் அல்ல, இப்படிப் புத்தகங்களை ஒளிப்படம் எடுப்பதன் மூலம் அவற்றுக்கான டிஜிட்டல் புத்தக அலமாரியையும் உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றை சக பயனாளிகளுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் அடுத்து படிப்பதற்கான புதிய புத்தகத்தையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். புத்தகத்தை மின்னூலாகப் படிக்கலாம். ஒலிப்புத்தகமாகவும் கேட்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: >http://www.shelfie.com/

SCROLL FOR NEXT