தொழில்நுட்பம்

கேம‌ரா கல்லூரி

சைபர் சிம்மன்

உடனடியாகப் ஒளிப்படம் எடுக்க உதவிய போலாராய்டு கேம‌ராக்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் நினைவிருக்கிறதா? ஸ்மார்ட் போன் யுகத்தில் போலாராய்டு கேம‌ராவின் மகத்துவம் மங்கித்தான் போய்விட்டது.

அதனால் என்ன, இக்காலத்துக்கு ஏற்ப தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முயன்று வரும் போலாராய்டு ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு சிறந்த முறையில் ஒளிப்படம் எடுக்கும் கலையைக் கற்றுத்தர விரும்புகிறது. இதற்காகவென்றே 'போலாராய்டு யூனிவர்சிட்டி' எனும் இணையப் பல்கலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கேமரா கல்லூரியில் தொழில்முறைப் ஒளிப்படக்கலைஞர்கள் ஒளிப்படக் கலையில் பாடங்களைக் கற்றுத்தர உள்ளனர். முதல் பாடம் என்ன தெரியுமா? ஐபோனை தொழில்முறை ஒளிப்பட கலைஞர் போல பயன்படுத்துவது எப்படி என்பது.

இதே போல தொடர்ந்து ஒளிப்படப் பாடங்கள் பதிவேற்றப்பட உள்ளன‌. முதல் பாட‌த்தை இலவசமாகப் பயிலலாம். ஆனால் அதன் பிறகு ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த ஒரு கேம‌ராவையும் கொண்டு உயர் தரமான ஒளிப்படம் மற்றும் வீடியோவை உருவாக்குவது எப்படி என கற்றுத்தரும் நோக்கத்துடன் இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இணைய முகவரி: >https://www.polaroiduniversity.com/

SCROLL FOR NEXT