தொழில்நுட்பம்

சார்ஜிங் டேபிள்

செய்திப்பிரிவு

பெப்பெர்பிரை நிறுவனம் நெக்ஸோ நைட் என்கிற மர டேபிளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மொபைல் போன் மற்றும் டேப்லட் ஆகியவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம். டேபிளின் உள்ளே சார்ஜ் செய்யும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் முட்டை

முட்டை வடிவிலான ரிமோட் கண்ட்ரோல் கருவி. ஏசி, டிவி, லைட், பேன் என அனைத்து சாதனங்களுக்கும் தனித்தனி ரிமோட் மூலம் இயக்காமல் இந்த ஸ்மார்ட் முட்டை ஒன்றின் மூலமாகவே ஸ்மார்ட் போன் மூலம் இயக்கலாம்.

ஹீட் ஜாக்கெட்

இந்த மேலுடையை அணிந்து கொண்டால் குளிருக்கு இதமாக வெப்பத்தை வெளிப்படுத்தும். ஜாக்கெட்டுக்குள் இருக்கும் வெப்பத் தகடுகள் வழியே வெப்பம் மெதுவாக வெளியேறும். இதன் பேட்டரிகளை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் நீடிக்கும்.

SCROLL FOR NEXT