தொழில்நுட்பம்

தளம் புதிது: ஆண்டு கண்ணோட்ட வீடியோ

சைபர் சிம்மன்

புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் விடைபெறும் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். அந்த வகையில் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் கண்ணோட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நீங்களும் இது போல ஆண்டு கண்ணோட்ட‌த்தை வீடியோவாக உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது விடியோ (>http://wideo.co/en/) இணையதளம்.

இதில் உங்கள் வசம் உள்ள புகைப்படங்களைப் பதிவேற்றி அவற்றைக் கொண்டு ஆண்டு கண்ணோட்ட வீடியோவை உருவாக்கிக்கொள்ளலாம். அல்லது இந்தத் தளத்தின் காலரியில் இருந்து ஒளிப்படங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு ஒளிப்படத்துடனும் அனிமேஷன் வடிவில் வாசகங்களையும் சேர்க்க முடியும்.

தனிநபர்கள், சிறிய நிறுவன‌ங்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் இந்தச் சேவையைப் பயன்படுத்தித் தங்களுக்கான ஆண்டு கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் எளிதாகப் பகிரவும் செய்யலாம்.

SCROLL FOR NEXT