தொழில்நுட்பம்

சிறிய இயர்போன்

செய்திப்பிரிவு

மிகச் சிறிய ப்ளூடூத் இயர்போனை டேஷ் என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது. தண்ணீரில் நீச்சலடித்துக்கொண்டே பாடல்களைக் கேட்கலாம். இதை பொருத்தியுள்ளவரின் இதயத் துடிப்பு விவரங்களையும் கருவி சேமிக்கிறது.

மாடுலர் வாட்ச்

முதல் மாடுலர் கை கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பிளாக்ஸ் என்கிற நிறுவனம். இந்த கடிகாரம் மூலம் கிடாரில் டியூன் போடலாம். வாய்ஸ் கண்ட்ரோல், புளூடூத் வசதிகளும் உள்ளன.

பாதுகாப்பு அலாரம்

360 டிகிரி சுழலும் பாதுகாப்பு கேமரா அலாரம். ஆப்ஸ் மூலம் இயங்குவதால் வீட்டுக்குள் நுழைபவர்களில் செயல்களை செல்போன் அல்லது கணினி மூலமாகவே பார்த்துவிடலாம். குரலை வைத்தும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளும்.

SCROLL FOR NEXT