தொழில்நுட்பம்

ஹேர் டிரையர்

செய்திப்பிரிவு

நமக்கு நாமே சிகையலங்காரம் செய்யக்கூடிய மிகச்சிறிய ஸைலிஸ்ட் என்கிற டிரிம்மரை வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம். இதை டிரையராகவும் பயன்படுத்தலாம். தலைமுடியை வெட்டிக் கொள்ளவும் முடியும்.

கப் சீலிங்

பயன்படுத்தித் தூக்கி எறியும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்கும் சீலிங் போடும் கருவி இது. தொழில்முறையில் இல்லாமல் வீட்டிலேயே கைகளால் இயக்கலாம். காபி, ஜாம் போன்ற வகைகளை சீலிங் செய்ய உதவும்.

தண்ணீர் தொட்டி

வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொட்டியில் காற்று அழுத்தம் கொடுத்ததும் குறைந்த அளவிலான தண்ணீர் அழுத்தத்துடன் வெளியேறும்.

SCROLL FOR NEXT