தொழில்நுட்பம்

சந்தையில் புதுசு: ரிமோட்டுடன் கூடிய புதிய ப்ளூடூத் செல்பி ஸ்டிக்

செய்திப்பிரிவு

ஜீபிரானிக்ஸ் நிறுவனம் ப்ளூடூத் மற்றும் ரிமோட் வசதியுடன் கூடிய செல்பி ஸ்டிக்கை அறிமுகம் செய்துள்ளது. செல்பி புகைப்படங்கள் எடுக்க வசதியாக கடந்த வருடத்தில் பல நிறுவன்ங்கள் செல்ஃபி ஸ்டிக்கை சந்தைபடுத்தி வருகின்றன. தற்போது ஜீப்ரானிக்ஸ் நிறுவனமும் இந்த போட்டியில் சேர்ந்துள்ளது. மொபைல் போன் கேமிராவை பொருத்தப் பயன்படும், ஒரு குச்சியில் தாங்கி நிற்கும் சாதனம் ஆகும்.

ஜீப்ரானிக்ஸ் ZEB-SS100 என்னும் பெயர் கொண்ட இந்த ஸ்டி, அலுமினியம் அலாய் மற்றும் ABS பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது. இதன் கைப்பிடியை திருப்பினால் நீளத்தை அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 நிலைகளில் இதன் நீளத்தை அதிகரிக்கலாம்.

இந்த செல்பி ஸ்டிக் உள்ளேயே பொருத்தப்பட்ட ப்ளூடூத் ஷட்டர் ரிலீஸ் பட்டனுடன் வருகிறது. இதில் ஸ்மார்ட் போனை பொருத்தினால் போதும். செல்பி ஸ்டிக் கைப்பிடி கிரிப்பின் மேல் உள்ள பட்டனை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்கலாம். இது ப்ளூடூத் செயல்பாட்டிற்காக அதற்குள்ளேயே பொருத்தப்பட்ட பேட்டரியுடனும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக மைக்ரோ usb போர்ட்டுடனும் வருகிறது.

இந்த செல்பி ஸ்டிக் செல்போனுக்காக ஒரு சிறப்பான பொருத்தும் பொருளுடன் (மவுண்டிங்க் யூனிட்) வருகிறது. இதை சுழற்றி வேண்டிய திசையில் நிறுத்தி பூட்டிக்கொள்ளலாம். இந்த மவுண்ட் செல்போனை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாக பொருத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மவுண்டிங்க் பொருள் 80mm வரை விரிவுபடுத்தலாம்.

ZEB-SS100 செல்பி ஸ்டிக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஆன்லைன் கடைகளில் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸின் 1 வருட வாரண்டியுடன் வருகிறது. இதன் விலை ரூ. 999/-.

SCROLL FOR NEXT