தொழில்நுட்பம்

ஹாத்வே கிளாஸ்

செய்திப்பிரிவு

வாகனத்தில் செல்பவர்களுக்கு, பாதையை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள பல செயலிகள் இருக்கின்றதுதான்.

ஆனால் ஹாத்வே கிளாஸ் செயலி மூலம் இயங்கும் கருவியில் வாகனத்தில் இருந்தவாறே பாதையை அடையாளம் காணலாம். ஓட்டுநர் இருக்கைக்கு எதிரே இந்த கருவியை வைத்துவிட்டால் சாலையில் உள்ள திருப்பங்கள், அடையாளங்களை ஓட்டுபவருக்கு முன்கூட்டியே காட்டுகிறது. மேகமூட்டம், மழை, மற்றும் இரவு நேரங்களில் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த கண்ணாடி உதவும்.

மொபைல்போன் மூலம் கூகுள் மேப்பில் செல்ல வேண்டிய பாதையை தேர்வு செய்து இந்த செயலியோடு இணைக்க வேண்டும். இந்த பாதையில் செல்லும்போது சாலையை முன்கூட்டியே செயலி கண்ணாடி வழியே காட்டிவிடுகிறது.

நவீன உலை மூடி

கொதிக்கும் உலையை மூடுவதற்கும், கொதிக்கும் நீரை வடி கட்டுவதற்கும் சரிபாதி ஓட்டைகள் கொண்ட வடிகட்டிகள் நம்ம ஊரில் காலங்காலமாக புழக்கத்தில் உள்ளதுதான். அதையே நவீனமாக வந்திருக்கிறது ஒன்லிட் என்கிற பெயரில்.

இந்த உலை மூடி அனைத்து வகையான பாத்திரங்களுக்கும் பொருந்துகிறது. வடிகட்டியாகவும் பயன்படுகிறது. மேலும் அதிகமாக கொதிக்கும்போது குறைக்கவும், வெப்பத்தை தக்க வைக்கவும் செய்கிறது. விலை 45 டாலர்.

SCROLL FOR NEXT