தொழில்நுட்பம்

நவீன பூட்டு

செய்திப்பிரிவு

வீடுகளுக்கான நவீன பூட்டை யேல் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுள் நெஸ்ட் கருவியுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைஃபை செயல்படாமல் போனாலும் இது இயங்கும்.

ஸ்டார்வார்ஸ் ஸ்பீக்கர்

ஏசி வேர்ல்டு வைடு நிறுவனம் புதிதாக ஸ்டார்வார்ஸ் புளூடூத் வயர்லெஸ் ஸ்பீக்கர்களை தயாரித்துள்ளது. இவை முகமூடியைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும்.

3டி கேமிரா

ஆர்பெக் நிறுவனம் புதிதாக முப்பரிமாண (3டி) கேமிராவை உருவாக்கியுள்ளது. இதில் புகைப்படங்களை எடுத்து முப்பரிமாணத்தில் பார்க்கலாம். ஏஆர்எம் பிராசஸர் இதில் உள்ளதால் கம்ப்யூட்டரைப் போன்று செயல்படும்.

SCROLL FOR NEXT