தொழில்நுட்பம்

4ஜி வசதி கொண்ட நோக்கியாவின் 2 அடிப்படை மாடல் மொபைல்கள் அறிமுகம்

ஐஏஎன்எஸ்

அடிப்படை வசதிகள் கொண்ட இரண்டு புதிய மொபைல்களை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 215 மற்றும் 225 என இந்த இரண்டு மாடல்களிலும் 4ஜி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23 ஆம் தேதி முதல் இந்த மொபைல்கள் இணையத்தில் விற்பனைக்கு வருகின்றன. நவம்பர் 6 முதல் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். நோக்கியா 215ன் விலை ரூ.2,949. 225 மாடலின் விலை ரூ.3,499.

குறைந்த விலையில் 4ஜி இணைப்புடன், தேவையான நவீன வசதியுடன் இந்த மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக நோக்கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மொபைல்களிலும் 3.5 அளவு கொண்ட ஒலி இணைப்பு, எஃப்.எம் ரேடியோ, டார்ச் லைட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. நோக்கியாவின் பிரபலமான ஸ்னேக் விளையாட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

215 மாடலில் கேமரா கிடையாது. 225 மாடலில் பின்பக்கம் மட்டும் விஜிஏ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT