தொழில்நுட்பம்

தளம் புதிது: தானாக மறையும் டேப்

சைபர் சிம்மன்

வேலைக்கு நடுவே ஒரு சின்ன பிரேக் தேவை என்று ஃபேஸ்புக்கிலோ, யூடியூப்பிலோ நேரத்தை செலவிடுபவரா, நீங்கள்? அதன் பின்னர் அந்த தளத்திலேயே மூழ்கி அதிக நேரத்தை வீணடிக்கும் அனுபவம் அடிக்கடி ஏற்படுகிறதா? அப்படி என்றால் 'டேக்ஏஃபைவ்' இணைதளம் இதற்கான சுவாரஸ்யமான எளிய தீர்வை அளிக்கிறது.

எப்போது பிரேக் தேவை என தோன்றுகிறதோ அப்போது இந்தத் தளத்தின் மூலம் புதிதாக ஒரு டேபை வரவைத்துக்கொள்ளலாம். இந்த டேபில் நீங்கள் செலவிட விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்து கொள்ளலாம் என்பதோடு அந்தத் தளத்தை எத்தனை நிமிடங்கள் பார்க்கலாம் என்பதையும் தீர்மானித்துக்கொள்ளலாம் என்பதுதான் கவனிக்க வேண்டிய அம்சம்.

புதிய டேபை திறப்பற்கு முன், நீங்கள் விரும்பும் நேரக் கெடுவையும் குறிப்பிடலாம். அந்தக் கெடு முடிந்தவுடன் புதிய டேப் தானாக மறைந்து போய்விடும். ஆக, 5 நிமிடங்கள்தான் சமூக வலைதளத்தில் செலவிட வேண்டும் என நினைத்திருந்தால், 5 நிமிடம் முடிந்தவுடன் அந்த டேப் தானாக மறைந்துவிடும். நீங்களும் கவனச் சிதறல் இல்லாமல் வேலையைத் தொடரலாம்.

இணையதள முகவரி: >http://www.takeafive.com/

SCROLL FOR NEXT