இரைச்சலான இடத்திலும் அமைதியான உறக்கத்துக்கு வழி வகுக்கிறது ஸ்நூஸ் என்கிற இந்த சிறிய கருவி.
இந்த கருவியை பயன்படுத்தி வெளிப்புறத்திலிருந்து வரும் ஒலி மாசை குறைக்கலாம்.
கையடக்கமான இந்த கருவியை போன் மூலமாகவும் இயக்கலாம். சத்தம் காரணமாக தூக்கம் வராமல் அவதிபடும் பெரியவர்கள், குழந்தைகள் தூங்குவதற்கு வசதியாக இந்த கருவியைப் பயன்படுத்தலாம் என்கிறது இதைத் தயாரிக்கும் நிறுவனம். அடுத்த வருடம் இந்த கருவி வெளிவர உள்ளது.
கையடக்க காபி மெஷின்
இடத்தை அடைத்துக் கொள்ளும் காபி இயந்திரத்துக்கு விடுதலை கொடுக்கிறது புருவிலோ காபி மேக்கர்.
சின்ன பிளாஸ்க் அளவில் இருக்கும் உடனடி காபி இயந்திரத்தை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செல்போன் செயலி மூலமும் இந்த இயந்திரத்தை இயக்கலாம்.
தினமும் எத்தனை மணிக்கு காபி வேண்டும் என செயலி அலாரம் வைத்துக் கொள்ளலாம்.
காபி கொட்டையை வறுத்து பொடிசெய்து இரண்டு நிமிடத்தில் காபி ரெடி செய்து விடுகிறது இந்த கையடக்க காபி இயந்திரம்.