தொழில்நுட்பம்

வித்தியாச எல்இடி விளக்குகள்

செய்திப்பிரிவு

எல்இடி விளக்கையே வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் நிர் செகொனொஸ்கி என்கிற நியூயார்க்கைச் சேர்ந்த வடிவமைப்பாளர்.

டெஸ்கி, ஜிக்கி, கிளாஸி என்கிற இந்த மூன்று எல்இடி டேபிள் விளக்குகளும் 3டி முறையில் ஒளிர்கின்றன.

ஒரே நேர்கோட்டில் ஒளிரும் எல்இல்டி விளக்குகள் ஒரு கூடையைப் போல ஒளிர்கின்றன. இதை அலங்கார விளக்காகவும், டேபிள் விளக்காகவும் பயன்படுத்தலாம். இந்த எல்இல்டி விளக்கு 50,000 மணி நேரம் இயங்கக்கூடியது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹெட்போன்

அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன டிரண்டி வரியோ ஹெட்போனை வெளியிட்டுள்ளது ஒரு நிறுவனம்.

இந்த ஹெட்போனை மடக்கி வைத்துக் கொள்ளவும் செய்யலாம். வழக்கமான ஹெட்செட் வடிவில் இருந்தாலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது என்பதால் என்பதால் இசையை மிகத் துல்லியமாக கேட்க முடியும். இது 365 கிராம் எடை கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT