தொழில்நுட்பம்

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுகமா? 

ஐஏஎன்எஸ்

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஐஃபோன் 12 அறிமுக நிகழ்ச்சியை நடத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே வாரத்தில் ஐஃபோன் 12க்கான முன்பதிவும், அதற்கடுத்த வாரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியும் நடக்கவுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு நெருக்கமான ஜான் ப்ராஸர் என்பவர் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், அக்டோபர் 13, செவ்வாய் அன்று இந்த நிகழ்ச்சி நடக்கலாம் என்ரும், அக்டோபர் 16லிருந்து முன்பதிவு செய்யப்படும் என்றும், அக்டோபர் 23 முதல் டெலிவரி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். அதே நேரம் ஐஃபோன் 12 ப்ரோ மாடல் மொபைல்கள் நவம்பர் வரை விற்பனைக்கு வராது என்றும் ப்ராஸர் கூறியுள்ளார்.

மேலும், ஆப்பிள் வாட்ச் 6 மற்றும் புதிய ஐபேட் வடிவமும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று ப்ராஸர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஐஃபோன் 12 அறிமுக நிகழ்ச்சியை நேரில் காண எதிர்பார்ப்பதை விட கூடுதலான நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட சாத்தியங்கள் உண்டு என்று கூறியிருந்தார்.

ஐஃபோன் அறிமுகத்துக்கான தேதி அக்டோபருக்குத் தள்ளிப் போயிருப்பதால், கோவிட் நெருக்கடியால் பல நாடுகளில் மூடப்பட்டிருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு அவகாசம் கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT