தொழில்நுட்பம்

ஆட்டோ கார்

செய்திப்பிரிவு

நம்மூரில் மூன்று சக்கரம், இன்ஜின் இருந்தாலே அது ஆட்டோ. இப்போது மூன்று சக்கர கார் உருவாக்கப்பட்டுள்ளது.

எலியோ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தக் கார் தொழில் நுட்பத்துக்கு இப்போது அதிக அளவில் முதலீடுகள் குவிகிறது. இந்தக் காரை வாங்க 45 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவர உள்ள இந்தக் காரின் விலை 6,800 டாலராகும். கார் தயாரிப்புக்கான முதலீட்டில் 75 சதவீதம் முன் பதிவு மூலமே இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. துணிகர முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.

வித்தியாசமான சைக்கிள்

அமெரிக்காவைச் சேர்ந்த ரேட் ரோவர் நிறுவனம் பேட்டரியில் செயல்படும் புதுவிதமான சைக்கிளை வடிவமைத்துள்ளது. மணல், கரடு முரடான சாலை, மலைப் பகுதிகளில் இந்த சைக்கிளில் எளிதாக பயணிக்க முடியும். முன் பக்க சைக்கிள் டயர் 10 அங்குலம் அகலமானதாக உள்ளது.

சஸ்பென்ஷனும் இருப்பதால் சொகுசான பயணம் கிடைக்கிறது. பின்புற சக்கரத்தைவிட இது சற்று சிறியது. அத்துடன் இதில் பேட்டரி இருப்பதால் பெடல் செய்வது எளிது. மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் இதில் செல்ல முடியும்.

SCROLL FOR NEXT