தொழில்நுட்பம்

தளம் புதிது: டெஸ்க் வேட்டை

சைபர் சிம்மன்

அடடா நம்ம டெஸ்கும்கூட இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? என ஏங்க வைக்கிறது ‘டெஸ்க்ஹண்ட்’ இணையதளம். பெயர் உணர்த்துவது போலவே பலவிதமான டெஸ்க் (மேஜை) சூழலைப் படம் பிடித்துக் காட்டும் தளம் இது.

டெஸ்க்கை மட்டும் அல்லாமல் அவற்றைப் பயன்படுத்தும் வடிவமைப்பாளர்களையும் அறிமுகம் செய்கிறது. டேனியல் எனும் இணைய வடிவமைப்பாளர் இந்தத் தளத்தை அமைத்திருக்கிறார்.

இந்தத் தளத்திற்காக என்றும் ஊக்கம் தரக்கூடிய பணிச் சூழலை பெற்றிருக்கும் வடிவமைப்பாளர்களை சந்தித்துப் பேட்டி கண்டு அவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்டாப் அமைந்திருக்கும் டெஸ்க்கின் தன்மையை விவரிக்கிறார்.

புதுமையான டெஸ்க் அமைப்பிற்கான யோசனையை நாடுபவர்களுக்கு இந்தத் தளம் ஊக்கமளிக்கும். நீங்களும் உங்கள் டெஸ்க் சூழலை இதில் பகிர விருப்பம் தெரிவிக்கலாம்.

இணையதள முகவரி: >http://deskhunt.com/

SCROLL FOR NEXT