தொழில்நுட்பம்

மர கீ போர்டு

செய்திப்பிரிவு

பிரான்ஸை சேர்ந்த ஓரீ என்கிற நிறுவனம் மரக்கட்டைகளின் கம்ப்யூட்டர் கீ போர்டுகளை தயாரிக்கிறது. விலை 150 யூரோவிலிருந்து தொடங்குகிறது. போனுக்கு மர உறைகளையும் இந்த நிறுவனம் வடிவமைக்கிறது.

கான்செப்ட் ஷூ

கடலில் வீசப்படும் வலைகளைக் கொண்டு காலணி தயாரிக்க அடிடாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை குறைக்க உள்ளது. இதற்காக ஒரு சேவை நிறுவனத்தோடு கூட்டு வைத்துள்ளது.

மைக்ரோ ரோபோ

தண்ணீரின் மேலே பூச்சி போல மிதக்கும் மைக்ரோ ஹைட்ரோ ரோபோவை வடிவமைத்துள்ளனர் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். தண்ணீரிலேயே ஜம்ப் செய்து எழுகிறது இந்த ரோபோ.

SCROLL FOR NEXT