தொழில்நுட்பம்

ஹெலிகாப்டர் விமானம்

செய்திப்பிரிவு

எக்ஸ்டிஐ ஏர்கிராப்ட் நிறுவனம் தயாரித்துள்ள டிரிபேன் 600 என்கிற இந்த குட்டி விமானத்துக்கு ஓடுபாதை தேவையில்லை. ஹெலிகாப்டரைப்போல அப்படியே மேலே எழுப்பி விடலாம். அதைபோலவே தரை இறக்கவும் செய்யலாம்.

ஓடுபாதையை பயன்படுத்துவதற்கு ஏற்ப சக்கரங்களும் உள்ளன. ஒரு விமானி மற்றும் ஐந்து பயணிகள், 800 மைல் முதல் 1200 மைல் வரை பயணிக்கலாம். ஹெலிகாப்டரில் உள்ள காற்றாடியைப் போல, இந்த குட்டி விமானத்தில் உள்ள மூன்று காற்றாடிகள் விமானத்தை மேலே எழுப்புகிறது.

மேலே சென்றதும் இந்த காற்றாடிகள் பக்கவாட்டில் சுற்றத் தொடங்குகின்றன. குடும்ப சுற்றுலா, மருத்துவ தேவைகள், தனிநபர் பயன்பாடுகளுக்கு இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT