தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்!

பா.பிரகாஷ்

வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் மோட் அம்சத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப்பை பலரும் உபயோகப்படுத்தி வருகின்றனர். பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் காலையில் எழுந்ததும் வாட்ஸ் அப்பில் தான் கண் விழித்து இரவில் தூங்கும் போதும் வாட்ஸ் அப்பை பார்த்து விட்டு தான் தூங்குகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல் வாட்ஸ் அப் நிறுவனமும் பல அம்சங்களை புதிது புதிதாக அறிமுகப் படுத்தி வருகின்றது.

அதில் ஒன்று தான் வாட்ஸ் அப் டார்க் மோட் இரவிலோ அல்லது இருட்டிலோ வாட்ஸ் அப்பை உபயோகம் படுத்தும் போது அதிக வெளிச்சம் கண்னில் பட்டு கண்ணிற்கு கேடு விளைவிக்கின்றது. அதை குறைக்கத் தான் இந்த டார்க் மோட்.

இந்த டார்க் மோர்டில் சாட்டிங் பேக்கிரவுணட் கருப்பு நிறத்திலும், குறுந்தகவல்கள் அனைத்தும் பச்சை நிறத்திலும் மாறிவிடும். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இலும் (IOS) அறிமுகப் படுத்தியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். தற்போது பீட்டா வெர்ஷனுக்கு மட்டுமே வந்துள்ள இந்த டார்க் மோட் விரைவில் அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என கூறப்புடுகிறது.

டார்க் மோடை மாற்றுவது:

உங்களது வாட்ஸ் அப் செயலியில் WhatsApp Settings > Chats > Theme > Dark சென்று டார்க்மோட் வசதியைப் பெறலாம்.

SCROLL FOR NEXT