அலுப்பாக உணர்கிறீர்களா? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லையா? இது போன்ற நேரங்களில் ஸ்மார்ட் ஃபோனில் பதில் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? ‘ஷபிள் மை லைப்’ செயலி இதைத்தான் செய்கிறது. ஆண்ட்ராய்ட் ஃபோனுக்கான இந்தச் செயலி, பொழுதுபோக்க வழி தெரியாத நேரங்களில் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை சொல்கிறது.
அருங்காட்சியகத்துக்குச் செல்லலாம் அல்லது யூடியூப்பில் கான் அகாடமி கல்வி வீடியோவைப் பார்க்கலாம் என்பதுபோல இந்தப் பரிந்துரைகள் அமைகின்றன. சும்மாயில்லை, அன்றைய தினத்தின் வானிலை மற்றும் பயனாளிகளின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பரிந்துரைகள் இருக்கின்றன.
பரிந்துரைக்கப்படும் செயல்களின் தன்மை பற்றிய விளக்கம் மற்றும் அவற்றுக்கு ஆகக்கூடிய செலவு பற்றிய விவரங்களும் இடம்பெறுகின்றன. இப்போதைக்கு 250-க்கும் மேற்பட்ட செயல்களின் பட்டியல் இருக்கிறது. பயனாளிகளும் புதிய செயல்களை இந்தச் செயலியிடம் பரிந்துரைக்கலாம்.
தரவிறக்கம் செய்ய; >https://goo.gl/4er6gI