தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்31

செய்திப்பிரிவு

வரும் பிப். 25-ம் தேதி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 மொபைல் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸில் எம்30, எம்30எஸ் என்ற மாடல்களை வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எம்31 மொபைல் பட்ஜெட் விலையில் வெளியாகவுள்ளது.

இந்த மொபைலை 'மெகா மான்ஸ்டர்' என்று சாம்சங் தனது அதிகாரபூர்வமான இணையதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. பிப். 25-ம் தேதி மதியம் 1 மணியளவில் சாம்சங் ஸ்டோரில் கேலக்ஸி எம்31 வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அமேசான் இணையதளத்திலும் வெளியாக வாய்ப்புள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31 இந்தியாவில் இரு அம்சங்களில் வெளியாகவுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு ரூ. 14,999 விலைக்கும் மற்றொன்று 6GB RAM + 128GB சேமிப்பு அளவு ரூ.16,999-க்கும் விற்கப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இதற்கு முன்னால் வெளியான எம் சீரிஸில் கேலக்ஸி M30 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ரூ.9,649-க்கும், சாம்சங் கேலக்ஸி M30S 4 GB RAM + 64GB சேமிப்பு அளவின் விலை ரூ.12,999-க்கும் விற்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்31 -யின் சிறப்பம்சங்கள்:

ஓஎஸ்:
ஆண்ட்ராய்டு 10

ப்ராஸசர்:
ஆக்டக்கோர்

டிஸ்பிளே:

* 6.4 இன்ச் ஃபுல் எச்டி திரை
* அமோல்ட் திரை (AMOLED Display)

பேட்டரி:

* 6000mah

கேமரா:

* பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 64 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள், 5 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் (Macro) என நான்கு கேமராக்கள் உள்ளன.
* முன்புற கேமரா - 32 மெகாபிக்சல்

கடந்த ஆண்டு ஜியோமி நிறுவனம் வெளியிட்ட ரெட்மி நோட் 8 ப்ரோ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைக் கருத்தில்கொண்டு பட்ஜெட் விலையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் 31 மொபைலை வெளியிடுவதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT