தொழில்நுட்பம்

இந்தியச் சந்தைக்கேற்ற புதிய ஸ்மார்ட் ஃபோன்

செய்திப்பிரிவு

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான எலிஃபோன் ஐபெர்ரி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. ஐபெர்ரி ஆக்ஸஸ் பிரைம் பி800 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபோன் இந்த மாதம் கடைசியில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஃபோன் எலிஃபோன் பி800 என்பதன் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்தியச் சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது என்கிறார்கள். இதில் 4ஜி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐபெர்ரி நிறுவனத்தின் ஒரு வருட வாரண்டியுடன் இந்த ஃபோன் வாடிக்கை யாளருக்குக் கிடைக்கும்.

இரட்டை மைக்ரோ சிம் வசதி கொண்டது இது. 268 மணி நேரம் நீடித்திருக்கும் தன்மை கொண்ட இதன் பேட்டரியின் சக்தியில் 21 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும்.

SCROLL FOR NEXT