கூகுள் ஹாங் அவுட் சேவைக்காக புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. hangouts.google.com எனும் அந்தத் தளத்தின் மூலம் ஹாங்கவுட் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வீடியோ அழைப்பு, தொலைபேசி அழைப்பு, மெசேஜிங் ஆகிய வசதிகளை முகப்புப் பக்கத்தில் இருந்தே எளிதாக அணுகலாம். ஹாங்கவுட்டை பயன்படுத்துவதற்காக இன்னொரு வழியை அறிமுகம் செய்திருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம் ஜி-மெயில் மற்றும் ஜி-பிளஸ்சில் இருந்து ஹாங் அவுட்டை விடுவித்திருக்கிறது.
பிரவுசரில் இருந்தே ஹாங் அவுட் வசதியை எளிதாகப் பயன்படுத்துவதையும் இது சாத்தியமாக்குகிறது.