யூடியூப் தளத்தில் வீடியோக்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. இவை பெரும்பாலும் பொழுதுபோக்கு ரகம் என்றாலும் அருமையான கல்வி வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதே போல விஞ்ஞான விளக்கங்களை சுவாரஸ்யமாக அளிக்கும் யூடியூப் சேனல்களும் அநேகம் இருக்கின்றன.
இவற்றில் ஒன்றான பியர்ட்ட் சயன்ஸ் கய் (Bearded Science Guy) சேனலில் அண்மையில் டாலர் நோட்டை எரிப்பது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது. டாலர் நோட்டை எரிப்பது என்றால் உண்மையில் எரிப்பது அல்ல; அது தீப்பற்றிக்கொள்ளும்; ஆனால் எரியாது. ( உண்மையிலேயே எரித்தால் அது சட்ட விரோதச் செயல்). அது எப்படித் தீப்பற்றியும் நோட்டு எரியாமல் இருக்கும்? அதற்கான விளக்கத்தை இந்த வீடியோ வழங்குவதுதான் சுவாரஸ்யம்.
91 சதவீத ஐசோபிரோபைல் ஆல்கஹாலில் அதே அளவில் நீரை ஊற்றி அந்தக் கரைசைலில் டாலர் நோட்டை மூழ்க வைத்து எடுத்துப் பற்றவைக்க வேண்டும். இப்போது சுற்றி தீப்பற்றிக்கொள்ளும்; ஆனால் நோட்டு எரியாது. ஏனெனில் ஆல்கஹால் தீயில் உண்டாகும் வெப்பத்தை அதில் கலந்திருக்கும் நீர் உறிஞ்சிவிடும்.
ஆனால் அளவு சரியில்லை என்றால் ரிஸ்காகிவிடும். எனவே எச்சரிக்கை தேவை!
வீடியோவைக் காண: >https://goo.gl/GT1qcB