தொழில்நுட்பம்

செயலி புதிது: குறுஞ்செய்தி பேக்-அப்

சைபர் சிம்மன்

வாட்ஸ் அப் வந்த பிறகு குறுஞ்செய்திகளின் (எஸ்.எம்.எஸ்.) பயன்பாடு குறைந்துவிட்டது. இருந்தாலும் குறுஞ்செய்திகளைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எஸ்.எம்.எஸ். பேக்-அப் செயலி அதற்கு உதவுகிறது. இந்தச் செயலி மூலம் போனில் வரும் குறுஞ்செய்திகளை உங்கள் ஜிமெயில் கணக்கில் சேமித்துக்கொள்ளலாம்.

இதற்காக முதலில் ஜிமெயில் செட்டிங்கில் ஐ.எம்.ஏ.பி. அம்சத்தை இயக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு செயலியை இயக்கி இமெயில் முகவரியைச் சமர்ப்பித்து இயக்க வேண்டும். கொஞ்சம் பழைய செயலிதான்.

ஆனால் குறுஞ்செய்திப் பிரியர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதே பணியைச் செய்யும் வேறு பல செயலிகளும் இருக்கின்றன.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: >https://goo.gl/T1lmi7

SCROLL FOR NEXT