அமெரிக்காவின் இலியோ மோட்டார்ஸ் நிறுவனம் 3 சக்கரங்களைக் கொண்ட காரை விரைவில் விற்பனைக்குக் கொண்டுவர உள்ளது.
அமெரிக்காவில் பிரபல நிறுவனங்களின் கார் விலை அதிகம் என்பதால், அடித்தட்டு மக்களும் கார்கள் பயன்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தில் மூன்று சக்கர கார்களை வடிவமைத்துள்ளது. ஒரு காரின் விலை 6800 டாலர்தான்.
இந்த காரை தயாரிக்க கிரவுட்பண்டிங் முறையில் 7 கோடி டாலர் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இதுவரை 8370 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்களை சர்வீஸ் செய்ய பெப் பாய்ஸ் என்கிற ஆட்டோமொபைல் சர்வீஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தமும் செய்துள்ளது இலியோ மோட்டார்ஸ்.
எப்எம் கேமரா
கேமரா லென்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஹோல்கா, பெரிய கேமரா மாடலில், சிறிய அளவில் பொம்மை கேமராவை வெளியிட உள்ளது. இதில் எப்எம் கேட்கலாம், எஸ்டி கார்டு பயன்படுத்தி போட்டோவும் எடுக்கலாம்.