தொழில்நுட்பம்

சன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்த ஜியோ சினிமா

செய்திப்பிரிவு

ஜியோ குழுமத்தின் ஓர் அங்கமான ஜியோ சினிமா தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்காக, சன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதன் மூலம் ஜியோ சினிமா, தனது வாடிக்கையாளர்களுக்காக சன் நெக்ஸ்டின் பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.

ஜியோ சினிமா வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களுக்கான ஜியோ சினிமா ஆப், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா இணையதளம் மூலம் தென்னிந்திய திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம். எனினும் இதில் சன் குழுமங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் ஒளிபரப்பப்படாது. அதே நேரத்தில் திரைப்படங்களைக் கண்டுகளிக்க, சன் நெக்ஸ்ட் செயலியின் ஆண்டு சந்தாவான ரூ.489-ஐ செலுத்தத் தேவையில்லை.

முன்னதாக வால்ட் டிஸ்னி, ஈரோஸ் நவ், ஏஎல்டிபாலாஜி, வூட் ஆகிய நிறுவனங்களுடன் ஜியோ சினிமா இணைந்து செயல்பட்டு வந்ததுது. இந்நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்துள்ளது. ஜியோவைப் போல சன் நெக்ஸ்டும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே வோடபோன் ஐடியா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

2017-ன் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட சன் நெக்ஸ்ட் நிறுவனம், மற்ற இந்திய ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களைப் போல் சொந்தமாக வீடியோக்கள், வெப் சீரிஸ்களைத் தயாரிப்பதில்லை. திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்டவை மீதே சன் நெக்ஸ்ட் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT