தொழில்நுட்பம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் பிளான்

பா.பிரகாஷ்

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு ஈடாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தனது புதிய ப்ரீபெய்ட் பிளானை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீபெய்ட் பேக்கின் விலை ரூ.187 ஆகும். ரூ.187க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு 2.2ஜிபி மொபைல் டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு சலுகைகள் உள்ளன.

இந்தச் சலுகை 28 நாட்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த முடியும். மற்ற நிறுவனங்கள் போல் இதில் 4ஜி ஸ்பீடில் இல்லை. அனைத்து இடங்களிலும் 3ஜி தான்.

இதே சலுகையை மற்ற நிறுவனங்கள் கூடுதலான விலைக்குத் தருகின்றனர்.

அதன் விலைப் பட்டியல்:

ஜியோ நிறுவனம் - ரூ.198
வோடபோன் நிறுவனம் - ரூ.209
ஏர்டெல் நிறுவனம் - ரூ. 249

SCROLL FOR NEXT