தொழில்நுட்பம்

இணையத்தின் முதல் பரிமாற்றம்

சைபர் சிம்மன்

இணையத்தில் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான பைட்களில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இணையத்தில் முதன் முதலில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா? இது பற்றிய ஆச்சரியத் தகவலை பிஸ்னஸ் இன்சைடர் இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது.

இன்றைய இணையத்தின் மூல வடிவமான அர்பாநெட் வலைப்பின்னலில் இந்தத் தகவல் பரிமாற்றம் 1969ல் நிகழ்ந்துள்ளது. இணையத்துக்கான ஆய்வு நடைபெற்று வந்த யூ.சி.எல்.ஏ மையத்தில் இருந்து ஆய்வாளர்கள் சில நூறு மைல்கள் தொலைவில் இருந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இதற்காக அவர்கள் லாக் இன் எனும் வார்த்தையை மட்டும் அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது முதல் இரண்டு எழுத்துக்களை டைப் செய்ததுமே

கம்ப்யூட்டர் கிராஷாகி விடவே அந்த இரண்டு எழுத்துக்கள் மட்டும் போய் சேர்ந்தன. ஆக, ‘லோ’ தான் இணையத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் வார்த்தையாக ஆனது.

இணைப்பு: http://goo.gl/VOvyTn

SCROLL FOR NEXT