நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாகப் பொழுதைக் கழிப்பது மகிழ்ச்சியானது. இதற்கான திட்டமிடலை எளிதாக்கும் வகையில் யூப்.ரீ இணையதளம் அமைந்துள்ளது. இந்தச் சேவை இலவசமானது, இதைப் பயன்படுத்த உறுப்பினராக வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
சந்திப்புக்கான அழைப்புகளை அனுப்ப விரும்பினால் இந்தத் தளத்தில் நுழைந்து , புதிய நிகழ்ச்சிப் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாகத் தோன்றும் பக்கத்தில் மேலே உள்ள கட்டத்தில் நிகழ்ச்சி தலைப்பைக் குறிப்பிட்டு, கீழே உள்ள காலண்டரில் அதற்கான தேதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு வரும் பக்கத்தில் உங்கள் பெயரைச் சேர்த்துவிட்டு, இந்தப் பக்கத்தை அழைப்பிதழாக நண்பர்களுக்கு அனுப்பிவைக்கலாம். இதற்கான இணைய இணைப்பை மட்டும் இமெயில் மூலம் அனுப்பிவைத்தால் போதும், நண்பர்கள் அதைப் பார்த்து, குறிப்பிட்ட தினத்தில் தாங்களுக்கு ஓய்வு இருக்கிறதா எனத் தெரிவிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்யவும் முடியும்.
இணையதள முகவரி: >http://ufr.ee/