கோப்புகளைச் சேமிக்கவும் பகிரவும் நீங்கள் டிராப் பாக்ஸ் சேவையைப் பயன்படுத்துபவராக இருந்தால் இதில் கூடுதல் பாதுகாப்புக்காக இரண்டு அடுக்குப் பரிசோதனை முறை வசதியை நாடலாம்.
இந்த முறையில் நீங்கள் எப்போது புதிய சாதனம் அல்லது கம்ப்யூட்டரில் இருந்து டிராப் பாக்ஸ் கணக்கை அணுக முயன்றாலும் உங்கள் செல்போனுக்கு ரகசியக் குறியீடு அனுப்பி வைக்கப்படும்.
அதைச் சமர்ப்பித்தால் மட்டுமே டிராப் பாக்ஸ் கணக்கில் நுழைய முடியும். தாக்காளர்களின் கைவரிசைக்கு இலக்காகும் அபாயத்தை இந்த இரண்டு அடுக்குப் பாதுகாப்பு குறைக்கும் எனக் கருதப்படுகிறது.