குழந்தைகளைக் கண்காணிக்க பெற்றோருக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ரிஸ்ட் பாண்ட்களை தனித்தனியாக குழந்தையும், அம்மாவும் அணிந்து கொண்டால் குழந்தை தனியாக இருந்தாலும், இதன் மூலம் அம்மா கண்காணிக்கலாம்.
சூடு கொடுக்கும் நானோ ஒயர்கள்
சூடாக ஒத்தடம் கொடுப்பதற்கு இனி வெந்நீர் பை, அல்லது மைக்ரோவேவ் ஹாட் பேக்குகளையோ பயன்படுத்தத் தேவையில்லை. அதற்கு தீர்வு தருகிறது சில்வர் நானோ இழை. பேட்டரி மூலம் இந்த இழைகளை சூடுபடுத்தி தேவைப்படும் இடத்தில் அணிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் கார்
ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்கினால் எப்படி இருக்கும் என பல்வேறு நிறுவனங்களும் வடிவமைப்பை வெளியிட்டு வரும் நிலையில், டெஸ்லா நிறுவன கான்சப்ட் இது. ஆப்பிள் கார் தயாரிப்பில் இறங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.