ஜியோமி ரெட்மி 2 விலை குறைந்தது
ஜியோமி ரெட்மி 2 மாடல் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகமானபோது அதன் விலை ரூபாய் 6,999. இப்போது இதன் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 5,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஜூலை 7 காலை 10 மணி முதல் இந்த விலைக் குறைப்பு.
ஆண்ட்ராய்டு பட்ஜெட் போன்கள்
இண்டெக்ஸ் நிறுவனத்தின் அக்வா க்யூ5 மாடலைத் தொடர்ந்து அக்வா ஏ2, அக்வா ஒய்2 அல்ட்ரா ஆகிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இரண்டுமே இரட்டை சிம் வசதி கொண்டவை. 3ஜி சேவை, வைஃபை, ப்ளுடூத் போன்ற வசதிகளும் கொண்ட பட்ஜெட் ஃபோன்கள்.
கேஸியோ ஸ்மார்ட் வாட்ச்
வாட்ச் தயாரிப்பில் பிரபலமான ஜப்பான் நிறுவனம் கேஸியோ அதன் முதல் ஸ்மார்ட் வாட்சை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் வாட்சின் விற்பனை இலக்காக சுமார் 507 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளதாகச் சமீபத்தில் அதன் தலைவர் பொறுப்பேற்றுக்கொண்ட கஜுஹிரோ கஷியோ தெரிவித்துள்ளார்.
புது கேஸியோ ஸ்மார்ட் வாட்சின் விலை சுமார் 25,000 ரூபாயாக இருக்கும். அடுத்த ஆண்டு மார்ச்சில் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இது அறிமுகமாகும். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுக்குப் பலத்த போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.