உலகப் பிரசித்தி பெற்ற மொபைல் கேம் அப்ளிகேஷன் ஆங்க்ரி பேர்டு. இதுவரை 300 கோடி பேர் உலகமெங்கும் இந்த கேமை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். இதில் 15 வகையான கேம்கள் உள்ளன.
ரோவியோ என்னும் எண்டர்டெயின்மெண்ட் மீடியா கம்பெனிதான் ஆங்க்ரி பேர்டு கேமை உருவாக்கியது. இந்த கம்பெனியின் வெப்சைட்டில் ஆங்க்ரி பேர்டு 2 கேம்ஸ் ஜூலை 30 அன்று வெளியாகும் என்ற தகவல் வீடியோ படமாகக் காட்டப்படுகிறது.
மின்னஞ்சல் முகவரி தந்தால் ஆங்க்ரி பேர்டு எப்போது மொபைல் ஸ்டோரில் கிடைக்கும் என்ற தகவலையும் அனுப்புகிறது அந்த இணையதளம். அதன் முகவரி: >http://goo.gl/ZyO7Fg