இணையத்தில் ஒளிப் படங்களைப் பார்த்து ரசிக்க இன்ஸ்டாகிராமும், பலரும் மறந்துவிட்ட பிளிக்கரும் சிறந்த வழி. இவை தவிர, உங்கள் பேஸ்புக் பக்கம் உட்பட இன்னும் பல வழிகள் இருக்கின்றன. இவற்றோடு இன்னும் ஒரு கூடுதல் வழி தேவை என நினைத்தால் பிக்ஸ்டாபிளேஸ் தளத்தைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பிக்ஸ்டாபிளேஸ், இணையத்தில் வெளியாகும் ஒளிப்படங்களைத் தேடிப் பார்க்க உதவுகிறது. இதில் உள்ள தேடல் கட்டத்தில் நீங்கள் இருக்கும் நகரம் அல்லது, எந்த நகரத்து ஒளிப்படங்களைப் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த நகரின் பெயரை டைப் செய்தால் அந்நகரம் தொடர்பான ஒளிப்படங்கள் எல்லாம் தோன்றுகின்றன.
இன்ஸ்டாகிராம், பிளிக்கர் உள்ளிட்ட சேவைகளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட படங்கள் தொகுத்தளிக்கப்படுகின்றன. இவை தவிர வரைபடம் மூலமும் தேடலாம்.
இந்தத் தளத்தில் சென்னை என டைப் செய்து பார்த்தால் வரும் ஒளிப்படங்கள் வியக்க வைக்கின்றன.
இணையதள முகவரி: >http://www.pixtaplace.com/