தொழில்நுட்பம்

துணி துவைக்கும் பை

செய்திப்பிரிவு

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் துணி துவைப்பதற்கான கடைகளை தேடி அலைவார்கள்.

வெளிநாடுகளில் துணி துவைப்பது என்றால் அதற்கு அதிகம் செலவிட வேண்டும்.

இது போன்ற நிலைமைகளில் கை கொடுக்கிறது இந்த துணி துவைக்கும் பை.

இதில் துணி, சோப்பு பவுடர், தண்ணீர் மூன்றையும் சேர்ந்து பையை இறுக்கி கட்டி வெளிப்பக்கமாக 30 விநாடிகள் தேய்த்து அழுத்த வேண்டும். இதற்கு பிறகு அழுக்கு நீரை வெளியேற்றிவிட்டு, துணியை அலசிவிட வேண்டும்.

துணிகளை வெளுப்பதற்கு ஏற்ப உள்பக்கமாக பிரத்யேக அமைப்பு உள்ளது.

இயந்திரம் செய்யும் வேலையை கையடக்க இந்த பை செய்து விடுகிறது.

SCROLL FOR NEXT