காலையில் சரியான நேரத்தில் கண் விழிக்க எச்சரிக்கை தேவையா? கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே அலாரம் வைத்துக்கொள்ளலாம்.
இதற்காக என்றே அலாரம் செயலிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்க, இதற்காக என்றே ஒரு தனி சாதனத்தை வடிவமைத்திருக்கிறார் பிரான்ஸ் வாலிபர் கிலாமே ரோல்டண்ட் (Guillaume Rolland). சென்சார்வேக் எனும் இவரது சாதனத்தில் என்ன விஷேசம் என்றால் இதில் ஒலி வராது.
மாறாக நறுமணம் உண்டாகும். அதாவது, ஒருவர் காபி பிரியர் என்றால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் காபியின் மணம் தோன்றச் செய்யலாம். ஆக, காலையில் அலார ஒலிக்குப் பதில் ‘கும்’ என்று காபி மணம் வீசித் துயிலெழுப்பும். இப்படி விருப்பமான பல நறுமணங்களை அமைத்துக்கொள்ளலாம். கூகுள் நிறுவனத்தின் விஞ்ஞானப் போட்டிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சாதனம் இப்போது கிக் ஸ்டார்ட்டர் தளத்தில் நிதி உதவி கோரி வந்திருக்கிறது.- >https://www.kickstarter.com/