தொழில்நுட்பம்

கேட் கன்வெர்ட்டர்!

சைபர் சிம்மன்

இணையப் பயன்பாட்டில் ஃபைல்களை மாற்றும் தேவை அடிக்கடி ஏற்படலாம். படங்களையோ டெக்ஸ்டுகளையோ ஒரு ஃபார்மட்டில் இருந்து இன்னொரு ஃபார்மட்டுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

இது போன்ற நிலையில் உதவப் பல கன்வெர்ட்டர் சேவைகள் உள்ளன. இந்த வரிசையில் கன்வெர்ட்காட் இணையதளத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த இணையதளம் குறிப்பிட்ட ஃபார்மட்டில் இருக்கும் ஃபைல்களை எச்டிஎம்எல், எக்ஸ்எம்எல், பிடிஎப் ,பிஎம்பி, ஜேபெக், ஜிஃப் என நீங்கள் விரும்பும் ஃபார்மட்டில் மாற்றித்தருகிறது.

இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் மாற்ற விரும்பும் ஃபைல்களைப் பதிவேற்றிவிட்டு, மாற்ற விரும்பும் ஃபைல் ஃபார்மட்டைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். டெக்ஸ்ட், வீடியோ, போட்டோ என எந்த வடிவத்தில் உள்ள கோப்புகளை மாற்றவும் இதைப் பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி: >http://convertcat.com/

SCROLL FOR NEXT