தொழில்நுட்பம்

கேள்வி பதில் நேரம்

சைபர் சிம்மன்

கேள்வி பதில் சேவை என்றால் ரெட்டிட் தளத்தின் ஏ.எம்.ஏ. (AMA) சேவைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். இணையத்தின் முகப்புப் பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளத்தில் உள்ள கேள்வி பதில் சேவை விசேஷமானது. நெட் வாசிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பல பிரபலங்கள் இந்த ரெட்டிட் சமூகம் முன் ஆஜராகி பதில் அளித்திருக்கின்றனர். இவ்வளவு ஏன் அமெரிக்க அதிபர்கூட இதில் பங்கேற்றுள்ளார்.

இப்போது டம்பளர் வலைப்பதிவு சேவையிலும் இதே போன்ற கேள்வி பதில் வசதி அறிமுகமாகியிருக்கிறது. டம்பளர் சமூக வலைப்பின்னல் அம்சங்களைக் கொண்ட வலைப்பதிவு சேவையாக இருக்கிறது. இதன் பின்னும் வலுவான ஒரு இணைய சமூகம் இருக்கிறது.

இந்தச் சமூகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பதில் நேரம் (ஆன்சர் டைம்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், இணைய பிரபலங்கள் ஆகியோர் இந்தச் சேவை மூலம் ஆஜராகி பயனாளிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம். இணையவாசிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான அருமையான வழியாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த வசதிக்கான பகுதி ‘கேளுங்கள்’ எனும் அறிவிப்புடன் அருமையாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT