இணையத்தில் இமோஜிகளை எல்லா இடங்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இனி பாஸ்வேர்டிலும் இமோஜிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாக இருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த இண்டெலிஜெண்ட் என்விரான்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் வங்கி சேவைக்குப் பயன்படுத்தும் பாஸ்கோடுகளில் எண்களுக்குப் பதிலாக இமோஜி எழுத்துக்களைப் பயன்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது.
இதை வங்கிகள் ஏற்றுக்கொண்டால் இமோஜிகளைக் கொண்டே பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளலாம்.
44 இமோஜி எழுத்துக்களைக் கொண்டு எண்ணற்ற விதங்களில் பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதோடு இவற்றைக் கண்டுபிடிப்பதோ களவாடுவதோ தாக்காளர்களுக்கு இயலாத காரியமாக இருக்கும் என்று இந்நிறுவனம் சொல்கிறது.