தொழில்நுட்பத்தை ரசிக்க விருப்பம் கொண்டவர்கள் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சேவை ஜாய் ஆப் டெக். இணையத்தின் பழமையான சேவைகளில் இதுவும் ஒன்று. தொழில்நுட்பப் பித்தர்களுக்காகத் தொழில்நுட்பப் பித்தர்களால் நடத்தப்படும் கீக்கல்சர் தளத்தின் உப சேவையான இதில் இணையப் போக்குகளை விவரிக்கும் மற்றும் விமர்சிக்கும் கார்ட்டூன்களை கண்டு ரசிக்கலாம். ஒரே நேரத்தில் நகைச்சுவையும் வேண்டும்,
தொழில்நுட்ப தரிசனமும் தேவை என நினைப்பவர்களுக்கு இந்த கார்ட்டூன்கள் அருமையான விருந்தாக இருக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்பிள் மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இடையிலான மோதல் பற்றி இதில் வெளியாகியிருக்கும் கார்ட்டூன்.
ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய இசை சேவைக்குப் பாடகி துணிச்சலாக எதிப்பு தெரிவித்த விவகாரம் பற்றிதான் இணையத்தில் பெரிதாகப் பேசப்படுகிறது. இதைக் கச்சிதமாகக் காட்சி மொழியில் சற்றே கேலி கலந்து சொல்கிறது இந்தப் பக்கம். >http://www.geekculture.com/joyoftech/joyarchives/2157.html