தொழில்நுட்பம்

இடிந்துவிழும் கேக் வடிவ பாறை

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்த்த இடங்களில் ஒன்று ‘வெட்டிங் கேக் ராக்’.

திருமண கொண்டாட்ட கேக்கை வெட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாறை அமைந்துள்ளதால் இதற்கு இந்த பெயர்.

கடலோரமாக அமைந்துள்ள இந்த பாறை, கடல் அரிப்பின் காரணமாக இடிந்து கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் முழு பாறையும் இடிந்துவிடலாம் என ஆஸ்திரேலிய சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்குச் செல்லக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த பாறையை கடைசியாக பார்க்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT