பிரான்ஸைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான என்கோ விளையாட்டு வீரர்களுக்கு என்றே ஷாக் அப்சர்பர் காலணியை தயாரித்துள்ளது.
தற்போது பிரபலமாகிவரும் இந்த ஷாக் அப்சர் ஷூ விளையாட்டு வீரர்களுக்கு பிடித்தமானதாகிவிட்டது.
வழக்கமான காலணிகளை விட இந்த காலணிகள் ஓடும்போது குதிகாலுக்கு விசையை அதிகரித்துக் கொடுக்கிறது.
இதற்கு ஏற்ப ஷூவின் பின் பகுதியில் ஸ்பிரிங் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓடுபவரின் வேகம் அதிகரிக்கிறது.
நிற்கும்போது சாதாரண காலணி அணிந்து கொண்டு நிற்கும் உணர்வே ஏற்படுமாம்.