தொழில்நுட்பம்

காரா? மோட்டார் சைக்கிளா?

செய்திப்பிரிவு

அக்ரோடிசைன் என்கிற நிறுவனம் இந்த கார், மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளது. இரண்டு பைக்குகளை ஒட்டி வைத்தால் கார். பிரித்து விட்டால் மோட்டார் சைக்கிள்.

ஒரு பைக்கில் ஒருவர் பயணிக்கலாம். காராக மாற்றிக்கொண்டால் இருவர் பயணிக்க முடியும். இந்த டிசைனை கார் நிறுவனங்களுக்கு விற்க உள்ளனர். மேற்புறமாக மூடிக்கொள்ளவும் முடியும்.

ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் கார் இரண்டு பைக்குகளாக பிரிந்து விடும். நியூயார்க் வாகனக் கண்காட்சியில் இந்த டிசைனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT