இந்த எலக்ட்ரானிக் கருவியை பேண்டேஜ் போல உடலில் ஒட்டிக்கொண்டால் போதும் நமது உடல்நிலை குறித்த விவரங்கள் கிடைத்துவிடும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் மற்றும் மூளை தொடர்பான நோயாளிகளுக்கு எளிதாக மருத்துவம் பார்க்க இந்த பயோ ஸ்டாம்ப் உதவும்.
விண்வெளி எலிவேட்டர்
எலிவேட்டர் மூலம் விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சி வேலைகளில் உள்ளது ஜப்பானிய நிறுவனம் ஒன்று. காந்த விசையில் இயங்கும் ரோபோ கார் மூலம் ஏழுநாட்களில் விண்வெளி மையத்தை அடையலாம். இதற்காக கார்பன் நானோ டெக்னாலஜி மூலம் இணைப்பு கொடுக்கும் ஆராய்ச்சிகள் நடக்கிறது.
வானில் சாகசம்
பறவையைப் போலவே மனிதனையும் வானத்தில் தனியாக பறக்க வைக்கிறது இந்த ஜெட் பேக் ஸ்கை. யுவஸ் ரோஸி என்கிற ஸ்விட்சர்லாந்தின் விமானப்படை முன்னாள் வீரர் இந்த ஜெட் பேக் ஸ்கை இயந்திரத்தில் பறந்து உலகை வியக்க வைக்கிறார்.
விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மேலே சென்று அங்கிருந்து குதிக்க வேண்டும். ஜெட் இயந்திரம் என்பதால் விமானத்தைப் போன்ற வேகத்தில் பறக்கும்.
கார்பன் பைபரால் செய்யப்பட்டுள்ள இயந்திரத்தின் இறக்கைகள் 8 அடி நீளம் கொண்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த ஜெட்பேக் ஸ்கை இயந்திரம் மூலம் சாகசம் செய்து வருகிறார்.