ஸ்மார்ட் போன்களுக்கான போட்டியில் சோனி இன்னும் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அதன் பிரதான போனான எக்ஸ்பிரியா வரிசையில் புதிதாக Xperia Z4 போனை அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பானியச் சந்தையில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இது அறிமுகமாகியுள்ளது. இசட் 3 அறிமுகமான 7 மாதங்கள் கழித்து இந்தப் புதிய மாதிரி வந்துள்ளது.
வடிவமைப்பு நோக்கில் அதே தன்மையைக் கொண்டிருந்தாலும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளம், 5.2 அங்குல எச்டி டிஸ்பிளே ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அலுமினியம் பிரேமும் இதன் சிறப்பம்சம். 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் விரிவாக்கிக்கொள்ளலாம்.
வெள்ளை, கறுப்பு, அக்வா கிரீன் உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் கிடைக்க உள்ளது. இதன் முன்பக்க மற்றும் பின்பக்க காமிராக்கள் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதுடன் 25மிமீ வைடு ஆங்கிள் லென்சும் கொண்டிருக்கிறது.
ஜப்பானிய அறிமுகமே சத்தமில்லாமல் நிகழ்ந்திருப்பதால் சர்வதேச அறிமுகம் பற்றிய தகவல்கள் இல்லை.