சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான மெய்சூ மார்ச் மாதத்தில் 20 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மெய்சூவைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நிறுவனம் ஏற்கெனவே ஜனவரியில் 15 லட்சம் மற்றும் டிசம்பரில் 10 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்றுள்ளதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
இப்போது மார்ச் மாதம் 20 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்றிருப்பதாக மெய்சூ தனது வெய்போ (சீனாவின் டிவிட்டர்) பக்கத்தில் அறிவித்துள்ளது.
மெய்சூவின் இந்த அறிவிப்பு அதிரடியாக இருப்பதால் மட்டும் அல்ல நிறுவனம் இந்தியச் சந்தையில் நுழையத் திட்டமிட்டிருப்பதாலும் கவனிக்க வேண்டியிருக்கிறது. மெய்சூ இந்தியாவுக்கான பேஸ்புக் பக்கத்தில் அதன் எம்1நோட் போன் பற்றித் தகவல்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது.
சமீபத்தில் பெங்களூருவில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறது. ஆக, எப்போது வேண்டுமாமாலும் மெய்சூ போன் விற்பனைக்கு வரலாம்.